Botanix - தாவரங்கள் பற்றிய ஒரு பத்திரிகை

Botanix தமிழ்

புங்கா (Pongamia pinnata)

புகைப்படம்

Pongamia pinnata

இந்திய பீச் மரம். புங்கா Pongamia pinnata ( மற்ற பெயர்கள்: Honge Tree, Pongam Tree, Panigrahi). இலை உதிர் மரமாகும் இது 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பாபாசியே குடும்பத்தைச் சேர்ந்தது. பரந்த உச்சியும். அதிகமான சிறு வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற பூக்கள் நிறைந்து இருக்கும். இதன் பிறப்பிடம் இந்தியா ஆனால் பொதுவாக தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி இருக்கின்றது. தமிழில் அழைக்கப்படும் புங்க என்ற பெயரே இதன் லத்தீன் பெயரில் இருக்கின்றது.

வெள்ளி 1.10.2010 13:39 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்

இந்தோனேசிய மாம்பழங்கள்

இந்தோனேசிய போர்னியோ தீவுகளில் 34 வகை மா இனங்கள் (மான்கிஃபெரா) இயற்கையாகவே உள்ளன. மழைக்காடுகளை வேகமாக அளித்து வருவதால் அனேக இனங்கள் ஏறக்குறைய அழியும் நிலையில் உள்ளன. சில மா இனங்கள், உதாரணமாக, களிமண்டன் மா (மான்கிஃபெரா கஸ்தூரி) ஏற்கனவே காடுகளில் அழிந்துவிட்டது.

வியாழன் 30.9.2010 17:35 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்

ரொட்டிப் பழம். Artocarpus odoratissimus, Marang

இனம் ரொட்டிப் பழம் (Artocarpus) இனத்தில் Moraceae ( மல்பரி அல்லது அத்தி) குடும்பத்தை சேர்ந்தவை சுமார் 60 வகைகள் பசுமை மாறா மலைக்காடுகளில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் சமுத்திர தீவுகளில் காணப்படுகிறது. ரொட்டிப் பழங்கள் Ficus வகையோடு நெருங்கிய தொடர்புடையவை. அதிகம் சாகுபடி செய்யப்படும் ரொட்டிப் பழ வகை Atocarpus altilis. மற்ற இதர வகைகள் Artocarpus communis, Artocarpus integer (Cempedak) Artocarpus heterophyllus (Jack furit, Nangka ) மற்றும் Artocarpus odoratissimus (Marang) ஆகியவை ரொட்டிப் பழ வகையில் சேர்ந்தவை.

புதன் 29.9.2010 15:22 | இருந்து அச்சிடப்பட்டது | நீர்வாழ் மற்றும் நீர் சார்ந்த தாவரங்கள்

வெல்விட்சியா (Welwitschia mirabilis) - வாழும் படிமம் பயிரிடும் முறை

புகைப்படம்

வெல்விட்சியா (Welwitschia mirabilis) ஒரு வரலாற்றுக்கு முந்திய காலத் தாவரம். இது நமீபியா, மற்றும் தெற்கு அங்கோலாவின் அட்லாண்டிக் சமுத்திர கரையோரமாக ஒரு சிறு பகுதியில் வளர்கிறது. வெல்விட்சியா உண்மையில் ஒரு மரமாகும், ஆனால் முதலில் பார்க்கும்போது அவ்விதம் தென்படாது. முழு தாவரத்திற்கும் ஒரு சிறிய தண்டும் அதிலிருந்து இரண்டு இலைகளும் வளர்கிறன- இவை பெரிய சுருண்ட ரிப்பன்கள் போல் நுனியில் நைந்தும் வறண்டும் இருக்கும். வெல்விட்சியா மிரியாபிளிஸ், சில நேரங்களில் ஒரு குப்பை குவியல் போல் காட்சியளிக்கும்!

செவ்வாய் 28.9.2010 13:16 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்

இந்தியத் தாமரை (Nelumbo nucifera)

புகைப்படம்

இந்தியத் தாமரை மலர்.

இந்தியத் தாமரை (Nelumbo nucifera) ஒரு அழகான நீர்வாழ் தாவரமாகும் பசுமையான இலைகள் நீர் மேல் மிதக்கும். இளஞ்சிவப்பு மலர்கள் நீண்ட தண்டுகளில் நீருக்கு மேல் பல சென்டிமீட்டர் உயரத்தில் அழகாக இருக்கும். இந்திய தாமரை புனிதமாகக் கருதப்படுகிறது, பௌத்தர்களால் மத சடங்குகளின் போது அதிகம் பயன்படுத்தப் படுகிறது. முழு தாவரமும் மனித பயன்பாட்டுக்கு உகந்தது. இருந்தாலும் முக்கியமாக அதன் விதைகளும் வேர்களும் (கிழங்கு) தென்கிழக்கு ஆசியா முழுவதும் பாரம்பரிய உணவகப் பயன்படுத்தப் படுகிறது. இந்திய தாமரை ஒரு சதுப்புநிலத் தாவரம், அதை மணம் மிகுந்த நீர் அல்லி மலர்கள் முறையிலேயே வளர்க்கலாம். இந்த செடியை நமது பருவச் சூழ்நிலைகளில் வளர்ப்பது கடினமில்லை, ஆனால் வளர்ப்பு முறை தெரிந்து இருக்க வேண்டும்!

ஞாயிறு 26.9.2010 18:15 | இருந்து அச்சிடப்பட்டது | நீர்வாழ் மற்றும் நீர் சார்ந்த தாவரங்கள்

Continue: 1-5 6-10

KPR பற்றி

KPR கார்டனர்ஸ் கிளப் ஸ்லோவாகியா
KPR - கார்டனர்ஸ் கிளப் ஒரு சர்வதேச தோட்டக்காரர்களின் நிறுவனம். மேலும் அறிய
தாவரங்கள் வளர்ப்பதில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோட்டங்கள் பற்றி, தாவரங்கள், தாவரங்கள் வளைப்பது பற்றி போன்ற கட்டுரைகளை எழுதுங்கள், மேலும் உங்களது மொழியில் எங்களது 'போடானிக்ஸ்' வெளியிடுங்கள்! மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள். செய்திகள்