Botanix - தாவரங்கள் பற்றிய ஒரு பத்திரிகை

Botanix தமிழ்

பனியைத் தாங்கும் பனை Rhapidophyllum hystrix (ஊசிப் பனை)

புகைப்படம்

Rhapidophyllum hystrix

ராபிடோஃபில்லம் ஹிஸ்ட்ரிக்ஸ் பனை வகைகளில் அதிக பனிப்போழிவைத் தாங்கும் திறனுடையது. இது ராபிடோஃபில்லம் இனத்தில் உள்ள ஒரே வகையாகும். இந்தப் பனை பொதுவாக யு எஸ் ஏ தென்கிழக்கு ஈரப் பகுதிகளில் காணப்படுகிறது. இருந்தாலும், அதன் பனி தாங்கும் திறனுக்கு நன்றி, அது ஏறக்குறைய –20 வரை குளிரைத் தாங்குவதால் உலகம் முழுவதும் முக்கியமாக ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படும் தோட்டத் தாவரமாக உள்ளது.

இது குளிரைத் தாங்கும் பனை வகையாகும், இது 1–3 மீட்டர் உயரம் வரை மட்டுமே வளரக் கூடிய கண்ணை கவரும் முட்களை தண்டுப்பகுதியில் கொண்டதாகும். ராபிடோஃபில்லம் ஹிஸ்ட்ரிக்ஸ் ஒரு சிறிய புதர் போன்ற விசிறிப் பணியாகும். அதில் உறிஞ்சிகள் அதிகம் தோன்றுகின்றன, இந்த பெருகும் மரத்தண்டுகள் எப்போது விரிவடைந்துகொண்டே இருக்கும் இது தீர்மானிக்க முடியாத படி கெட்டியாகிக்கொண்டே இருக்கும். காலப்போக்கில் நெருக்கமாக அமைந்த தண்டுகள் ஊடுருவ முடியாத புதர்க் காடாக மாறும். இந்த ஊசிப் பனை அடிமரப் பகுதியை உருவாக்குவதில்லை ஆனால் மெதுவாக வளர்ந்துகொண்டே ஏறக்குறைய 1.2 மீ. நீளமும் 17.8 செ மீ அகலமும் உள்ள ஒரு கொண்டையாக மாறும். தண்டுப் பகுதிகள் பழைய இலையின் அடிப்பாகத்தால் , நாராக நீண்ட ஒல்லியான முட்களால் இருக்கும். பொதுவாக அவை நேராக வளரும் ஆனால் பழைய புதர்களில், அவை பருமனின்றி ஒல்லியாக அல்லது சூரிய ஒளிக்காக மற்றும் இடத்திற்காக நிலத்தை நோக்கி தலை சாய்ந்துகொண்டே வளரலாம். ஒவ்வொரு முறை தண்டு முதிர்ச்சி அடையும்போது, மேலும் அதிகமான ஒல்லியான முட்கள் இலை இணையும் இடத்தில் வெளிப்படுகின்றன. விதைகள் ஈர மண்ணில் ஊன்றப்பட்டு, சுமார் 20℃ யில் பராமரிக்கப்படுகிறது. முதல் மூன்று ஆண்டுகளில் பணியை உறை பனியில் இருந்து பாதுகாப்பது அவசியம். ஊசிப் பனை வெயிலில் அல்லது நிழலில் ஈரப்பதத்தில் இருப்பதை விரும்புகிறது. ஆனால் பூமத்திய ரேகையை விட்டு விலகிச் செல்லும்போது அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது. இருந்தாலும் அவை ஓரளவு நிழலில் இருக்கும்போது அழகாகக் காட்சிளைக்கின்றன. நீங்கள் இருக்கும் பகுதியின் வெப்பநிலை ஆண்டு முழுவதும் 10℃ க்குக் கீழே செல்லாமல் இருக்குமேயானால், மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட செடிகளை வீட்டுக்கு வெளியில் வைக்கலாம். குளிரான பகுதிகளில் வெப்பநிலை 10℃ க்கு கீழே செல்லுமானால், போதுமான அளவு பனியில் இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பனியை தாங்கும் பணியாக இருந்தாலும், அதற்கு நன்கு வடிகால் வசதியுள்ள நிலத்தில் தெற்கு நோக்கி வைக்கப்பட வேண்டும். குளிர்காலத்தில் இதன் முக்கிய எதிரி உறைபனியில்லை, ஆனால் வேர்களில் அதிக ஈரம் இருப்பது ஆகும். குறைந்தளவு வெப்பமும் அதிக நீரும் இணைந்து இருந்தால் வேர்கள் அழிந்துவிடும். இந்த பனை உறைபனியை –15℃ முதல் –20℃ வரை தாங்கக் கூடியது. மிகக் குறைந்த வெப்பநிலையில் தாக்குப் பிடித்ததாகப் பதிவு செய்யப்பட்டது –28℃.

உறைபனியைத் தாங்கும் பனைகள் விற்பனைக்கு

««« முந்திய கட்டுரை: புங்கா (Pongamia pinnata) அடுத்த கட்டுரை: காசி தேவதாரு (Pinus kesiya) »»»

வெள்ளி 1.10.2010 13:51 | இருந்து அச்சிடப்பட்டது | பனைகள்

KPR பற்றி

KPR கார்டனர்ஸ் கிளப் ஸ்லோவாகியா
KPR - கார்டனர்ஸ் கிளப் ஒரு சர்வதேச தோட்டக்காரர்களின் நிறுவனம். மேலும் அறிய
தாவரங்கள் வளர்ப்பதில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோட்டங்கள் பற்றி, தாவரங்கள், தாவரங்கள் வளைப்பது பற்றி போன்ற கட்டுரைகளை எழுதுங்கள், மேலும் உங்களது மொழியில் எங்களது 'போடானிக்ஸ்' வெளியிடுங்கள்! மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள். செய்திகள்