காசி தேவதாரு (Pinus kesiya)

காசி தேவதாரு (Pinus kesiya) வேகமாக வளரக்கூடிய ஆசிய மரமாகும், அதன் தாயகத்தை தவிர வேறு வெளியிடங்களில் வளர்வதை அதிகம் காணமுடியாது. மரங்கள் சுமார் 30 –35 மீட்டர் உயரமும், 1 மீட்டர் விட்டமும் வருமளவு வளரும். ஒவ்வொரு கிளையிலும் மூன்று முட்களும்- ஒவ்வொன்றும் சுமார் 15 –20 செ. மீ. நீளமும் இருக்கும். இந்த மரங்களின் பழங்கள் (கூம்புகள்) சுமார் 5 முதல் 9 செ.மீ. நீளமும் விதைகள் சுமார் 1.5 முதல் 2.5 செ.மீ. நீளமும் இருக்கும்.

காசி தேவதாருவின் (Pinus kesiya) பிறப்பிடம் இமயமலை பகுதியாகும்: வடகிழக்கு இந்தியாவில் (தற்போது மரம் வெட்டப்படுவதால் காசி மற்றும் நாக மலைத்தொடரில், மேகாலயா மற்றும் மணிப்பூர் மாநிலங்களிலும்), சீனா (யுன்னான் மாநிலம்) பர்மா (மியான்மர்) வடக்கு தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் (லை ச்சு, லாங் சோன், கோ பாங், குவாங் நின்), பிலிப்பைன்ஸ் (லூசான்). பிலிப்பைன்சில் இருந்து வரும் தேவதாரு, அபூர்வமாக பினுஸ் இன்சுலாரிஸ் வகையை சேர்ந்ததாக அறியப்படுகிறது. சீனாவில் இதே போன்ற இனமான யுன்னான் தேவதாரு (Pinus yunnanensis) ஐ காணலாம்.

இந்த வகைகள் சரிவுகளில் பல மரங்களுடன் கலந்து மோசமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அமில மண்ணில் (ph 4.5 ), 800 முதல் 2000 மீட்டர் உயரமான இடங்களில் ஆனால் பஐம்பாலும் 1200 முதல் 1400 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் காணப்படுகின்றன. இந்த இடங்கள் வெப்பமண்டலப் பகுதிகளுக்கு அருகில் அமைந்து ஆண்டுமுழுவதும் ஈரமும் வறட்சியும் கலந்து இருக்கின்றது. இந்த பகுதிகளில் மழை மிக அதிகமாகவும், பருவ நிலை ஏறத்தாழ வேப்பமண்டலமாகவும், மழை மற்றும் வறட்சி காலங்கள் ஆண்டு முழுவதும் மாறி மாறியும், அதிக மழையினால் காற்று ஈரப்பதம் 70 % க்கு மேலும் இருக்கின்றது. இம்மரம் சிறிது பணியைத் தாங்கும், ஆனால், வளரும் பருவத்தில் பின்தங்கிய பனிப்பொழிவில் பாதிக்கப்படும். இருந்தாலும் பயிரிடும் பருவத்தில் பனிப்பொழிவு இல்லாத பகுதி தேவை.

இத்தாவரத்தின் வேறு பெயர்கள் * Pinus khasya * மற்றும் * Pinus khasyanus *

Printed from neznama adresa