Botanix - தாவரங்கள் பற்றிய ஒரு பத்திரிகை

Botanix தமிழ்

அனைத்து கட்டுரைகளிலும் தேடு.

இங்கே போடானிக்ஸ் -ல் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் தமிழில் காணலாம்.

Category: அனைத்தும் ஊசியிலை வகைகள் தாவரங்கள் வளர்க்கும் முறைகள் நீர்வாழ் மற்றும் நீர் சார்ந்த தாவரங்கள் பனைகள் வெளிநாட்டு தாவரங்கள்

Author:

மாதத்தின் ஆவணங்கள்: அக்டோபர் 2010 (6 textů)

Parajubaea torallyi (பால்மா சிகோ , பொலிவியா மலைத் தென்னை).

Parajubaea torallyi தென் அமெரிக்காவின் அழகிய உறுதியான தென்னை வகையாகும். இருந்தாலும் அதன் இயற்கை தாயகத்திற்கு- பொலிவியா விற்கு – வெளியில் பெரிய அளவிலான விதை காரணமாக (அதிக அனுப்புதல் செலவு காரணமாக) அபூர்வமாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

பொலிவியாவை தாயகமாகக் கொண்ட இது வறண்ட, தூசியான, ஆண்டியன் மலைத்தொடர்களுக்கு இடை பள்ளத்தாக்குகளிலும் 2,700 முதல் 3,400 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. அதனால் இது உலகத்தில் உயர்ந்த இடத்தில் வளரும் தென்னை என்ற பெயர் இதற்கு உண்டு. வெப்பநிலை அபூர்வமாக 20℃ க்கு மேல் ஏறும் மேலும் இரவு நேர மூடு பனி மிகச் சாதாரணம். பனிக்காலத்தில் சில நேரங்களில் வெப்பநிலை –7℃ க்கு கீழே செல்லலாம் (ஜூலை ஆகஸ்ட்), மழை அளவு ஆண்டுக்கு 550 மி மி மட்டுமே.

ஞாயிறு 3.10.2010 12:34 | இருந்து அச்சிடப்பட்டது | பனைகள்

விதைகளில் இருந்து மா வளர்ப்பது

புதிதாக அறுவடை செய்யப்பட விதைகளை ஊன்றினால் நல்ல முளைப்பு விகிதம் இருக்கும். 2–6 மணி நேரம் வரை விதைகளை 20–25 ℃ உஷ்ணம் உள்ள நீரில் ஊறவைக்க வேண்டும்.

சனி 2.10.2010 14:02 | இருந்து அச்சிடப்பட்டது | தாவரங்கள் வளர்க்கும் முறைகள்

காலிமண்டன் மா, Kasturi (Mangifera casturi)

காலிமண்டன் மா, Kasturi (Mangifera casturi) அல்லது உள்ளூரில் கஸ்தூரி என அழைக்கப்படும் வெப்பமண்டல பழ மரம் சுமார் 10–30 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த வகை பல நோய்களால் தாக்கப்பட்டு இந்தோனேசியாவின் தெற்கு போர்னியோவில் ஒரு சிறு பகுதியான பந்ஜார்மார்ஷின் -ல் இருக்கின்றது. இந்நாட்களில் சட்டவிரோதமாக மரம் அறுப்பதால் ஏறக்குறைய அழிந்துகொண்டு இருக்கின்றது. இருந்தாலும் இது இன்னும் இதன் அருமையான ச ு

வெள்ளி 1.10.2010 21:58 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்

காசி தேவதாரு (Pinus kesiya)

காசி தேவதாரு (Pinus kesiya) வேகமாக வளரக்கூடிய ஆசிய மரமாகும், அதன் தாயகத்தை தவிர வேறு வெளியிடங்களில் வளர்வதை அதிகம் காணமுடியாது. மரங்கள் சுமார் 30 –35 மீட்டர் உயரமும், 1 மீட்டர் விட்டமும் வருமளவு வளரும். ஒவ்வொரு கிளையிலும் மூன்று முட்களும்- ஒவ்வொன்றும் சுமார் 15 –20 செ. மீ. நீளமும் இருக்கும். இந்த மரங்களின் பழங்கள் (கூம்புகள்) சுமார் 5 முதல் 9 செ.மீ. நீளமும் விதைகள் சுமார் 1.5 முதல் 2.5 செ.மீ. நீளமும் இருக்கும்.

வெள்ளி 1.10.2010 15:53 | இருந்து அச்சிடப்பட்டது | ஊசியிலை வகைகள்

பனியைத் தாங்கும் பனை Rhapidophyllum hystrix (ஊசிப் பனை)

புகைப்படம்

Rhapidophyllum hystrix

ராபிடோஃபில்லம் ஹிஸ்ட்ரிக்ஸ் பனை வகைகளில் அதிக பனிப்போழிவைத் தாங்கும் திறனுடையது. இது ராபிடோஃபில்லம் இனத்தில் உள்ள ஒரே வகையாகும். இந்தப் பனை பொதுவாக யு எஸ் ஏ தென்கிழக்கு ஈரப் பகுதிகளில் காணப்படுகிறது. இருந்தாலும், அதன் பனி தாங்கும் திறனுக்கு நன்றி, அது ஏறக்குறைய –20 வரை குளிரைத் தாங்குவதால் உலகம் முழுவதும் முக்கியமாக ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படும் தோட்டத் தாவரமாக உள்ளது.

வெள்ளி 1.10.2010 13:51 | இருந்து அச்சிடப்பட்டது | பனைகள்

புங்கா (Pongamia pinnata)

புகைப்படம்

Pongamia pinnata

இந்திய பீச் மரம். புங்கா Pongamia pinnata ( மற்ற பெயர்கள்: Honge Tree, Pongam Tree, Panigrahi). இலை உதிர் மரமாகும் இது 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பாபாசியே குடும்பத்தைச் சேர்ந்தது. பரந்த உச்சியும். அதிகமான சிறு வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற பூக்கள் நிறைந்து இருக்கும். இதன் பிறப்பிடம் இந்தியா ஆனால் பொதுவாக தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி இருக்கின்றது. தமிழில் அழைக்கப்படும் புங்க என்ற பெயரே இதன் லத்தீன் பெயரில் இருக்கின்றது.

வெள்ளி 1.10.2010 13:39 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்

Continue: மற்ற பக்கங்கள் இல்லை. ஆவணக் காப்பகத்தின் மேல்புறம் போக

KPR பற்றி

KPR கார்டனர்ஸ் கிளப் ஸ்லோவாகியா
KPR - கார்டனர்ஸ் கிளப் ஒரு சர்வதேச தோட்டக்காரர்களின் நிறுவனம். மேலும் அறிய
தாவரங்கள் வளர்ப்பதில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோட்டங்கள் பற்றி, தாவரங்கள், தாவரங்கள் வளைப்பது பற்றி போன்ற கட்டுரைகளை எழுதுங்கள், மேலும் உங்களது மொழியில் எங்களது 'போடானிக்ஸ்' வெளியிடுங்கள்! மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள். செய்திகள்