Botanix - தாவரங்கள் பற்றிய ஒரு பத்திரிகை

Botanix தமிழ்

இந்தியத் தாமரை (Nelumbo nucifera)

புகைப்படம்

இந்தியத் தாமரை மலர்.

இந்தியத் தாமரை (Nelumbo nucifera) ஒரு அழகான நீர்வாழ் தாவரமாகும் பசுமையான இலைகள் நீர் மேல் மிதக்கும். இளஞ்சிவப்பு மலர்கள் நீண்ட தண்டுகளில் நீருக்கு மேல் பல சென்டிமீட்டர் உயரத்தில் அழகாக இருக்கும். இந்திய தாமரை புனிதமாகக் கருதப்படுகிறது, பௌத்தர்களால் மத சடங்குகளின் போது அதிகம் பயன்படுத்தப் படுகிறது. முழு தாவரமும் மனித பயன்பாட்டுக்கு உகந்தது. இருந்தாலும் முக்கியமாக அதன் விதைகளும் வேர்களும் (கிழங்கு) தென்கிழக்கு ஆசியா முழுவதும் பாரம்பரிய உணவகப் பயன்படுத்தப் படுகிறது. இந்திய தாமரை ஒரு சதுப்புநிலத் தாவரம், அதை மணம் மிகுந்த நீர் அல்லி மலர்கள் முறையிலேயே வளர்க்கலாம். இந்த செடியை நமது பருவச் சூழ்நிலைகளில் வளர்ப்பது கடினமில்லை, ஆனால் வளர்ப்பு முறை தெரிந்து இருக்க வேண்டும்!

இந்தியத் தாமரையை விதையில் இருந்து வளர்ப்பதற்கு முதலில் வெளிப்புற உறையை மெதுவாக உப்புத்தாளால் தேய்த்துவிட வேண்டும். இது நீர் உள்ளே புகுவதற்கு வழிவகுக்கும் அதனால் முளைக்க முடியும். வெளிப்புற உறை கடினமாக இருந்தால், விதைகள் பல நூறு ஆண்டுகள் முளைப்புத் திறனோடு இருக்கும். இருந்தாலும் நீரின் வைத்து இருந்தால் அது முளைப்பதற்கு பல ஆண்டுகளாகும்.

புகைப்படம்

இந்தியத் தாமரை விதைகள் முளைத்தல்

மேல் உறையை போதுமான அளவு ராவி எடுத்துவிட்டீர்கள் என்பதை எப்படி அறிந்துகொள்வது? அதை நீரில் வைத்திருக்கும்போது அதன் அளவு பெரிதாவதன் மூலம் அறிய முடியும். 24 மணி நேரத்தினுள் அதன் அளவு இரண்டு மடங்கு பெரிதானால், மேலும் ராவி விட வேண்டியது இல்லை. இல்லையென்றால், விதை உறையை மேலும் ராவி விட வேண்டும். மீண்டும் நீரில் 24 மணி நேரம் வைத்து பின் அளவை சோதிக்கவும். இந்த செயல்முறையை அது இரண்டு மடங்கு பெரிதாகும் வரை செய்ய வேண்டும்.

விதைக்கு நீர் மட்டுமே தேவை

விதை உரையை நீக்கும் செயல் முடிந்தவுடன், நீரால் நிரப்பப்பட்ட தொட்டியில் ஊறவைக்கவும். விதை முளைப்பதற்கு உகந்த வெப்பநிலை பொதுவாக 27℃ முதல் 28℃ ( 20℃- ம் விதை ஊறும்போது இரு மடங்காகும்) இந்த வெப்ப நிலையில் விதை ஒரு வாரத்திற்குள் விரைவாக முளைக்க ஆரம்பிக்கும். தயவு செய்து புகைப்படத்தைக் காண: /…growing_from seed.html

முதல் இலை வெளிவந்தவுடன், முளைத்த விதையை ஒரு சதுப்பான அடித்தளத்தில் அல்லது தொட்டியின் ( நீர்நிலை அல்லது குளம்) அடிப்புறம் சரளையில் ஊன்றி வைக்கவும். நீர்மட்டம் குறைந்தது 30 செ. மீ நிலமட்டத்திற்கு மேல் இருக்க வேண்டும். நீர்த் தொட்டியின் அடிப்புறம் சரளையாக இருந்து மீன்கள் நிறைந்து இருந்தால், இந்தியத் தாமரை நன்றாக வளரும்.

மெதுவாக, செடி முதிர்வடையும்போது, அதற்கு அதிக இடம் தேவை. நீங்கள் குளிர்கால குட்டையிலோ அல்லது பசுமைக் குடிலிலோ அல்லது உறைபனி வெப்பநிலை இல்லாத இடங்களில் வளர்க்கலாம். இந்தியத் தாமரைகளை வளர்ப்பதற்கு உகந்த வெப்ப நிலை 20℃ முதல் 35℃ ஆகும்.

நமது வெப்ப நிலைகளில், குறைந்த அளவு வெப்பநிலை பொதுவானது, ஆனால் செடி எந்த சிக்கலும் இல்லாமல் வளரும். கோடையில் நீங்கள் இந்தியத் தாமரையை வெளியில் உள்ள குட்டைக்கு மாற்றலாம்,ஆனால் குளிர்காலத்தில் அது உள்ளே இருக்க வேண்டும். மிக மோசமான நிலை என்னவென்றால் இந்தியத் தாமரை ஈரமான அறைக்குள் அல்லி மலர்போல் துயில் கொள்ளலாம்.

இந்திய தாமரையை வளர்ப்பதற்கு உகந்தது கான்கிரீட் தொட்டிகள் சுமார் 60 அல்லது 80 லிட்டர் கொள்ளளவு உள்ளவை- இவை சுமார் 10 யூரோ ஆகலாம். பின்வரும் முறையை பின்பற்றவும்: முளைத்த விதையை ஒரு சதுப்பான தளத்தில் அல்லது வளர்ப்புத்தொட்டியில் இடும் சரளையை ஒரு பூத்தொட்டியில் வைத்து கான்கிரீட் தொட்டிக்குள் வைக்கவேண்டும். நன்கு முளைப்பதற்கு கான்கிரீட் தொட்டியை விளிம்பு வரை நீரால் நிரப்ப வேண்டும்.

கான்கிரீட் தொட்டியில் வளர்க்கும் ஆதாயம் என்னவென்றால் குளிர்காலத் தோட்டத்திற்கு அல்லது உங்கள் குடியிருப்புக்கு எளிதாக மாற்ற முடியும். உங்களது வீட்டில் வைக்கும்போது, தொட்டியை ஜன்னல் அருகில் அல்லது பால்கனியில் இந்தியத் தாமரைக்கு அதிக வெளிச்சமும் வெப்பமும் கிடைப்பதை உறுதிப்படுத்தி வைப்பது நல்லது. கோடையில் தொட்டியை பால்கனியின் அல்லது தோட்டத்தின் தென்புறம் வைப்பது மிக நல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் இந்தியத் தாமரை வளர்ப்பது மிக எளிதானது என்று நீங்கள் கண்டீர்கள்!

அடுத்த கட்டுரை: வெல்விட்சியா (Welwitschia mirabilis) - வாழும் படிமம் பயிரிடும் முறை»»»

ஞாயிறு 26.9.2010 18:15 | இருந்து அச்சிடப்பட்டது | நீர்வாழ் மற்றும் நீர் சார்ந்த தாவரங்கள்

KPR பற்றி

KPR கார்டனர்ஸ் கிளப் ஸ்லோவாகியா
KPR - கார்டனர்ஸ் கிளப் ஒரு சர்வதேச தோட்டக்காரர்களின் நிறுவனம். மேலும் அறிய
தாவரங்கள் வளர்ப்பதில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோட்டங்கள் பற்றி, தாவரங்கள், தாவரங்கள் வளைப்பது பற்றி போன்ற கட்டுரைகளை எழுதுங்கள், மேலும் உங்களது மொழியில் எங்களது 'போடானிக்ஸ்' வெளியிடுங்கள்! மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள். செய்திகள்