Botanix - தாவரங்கள் பற்றிய ஒரு பத்திரிகை

Botanix தமிழ்

வெல்விட்சியா (Welwitschia mirabilis) - வாழும் படிமம் பயிரிடும் முறை

புகைப்படம்

வெல்விட்சியா (Welwitschia mirabilis) ஒரு வரலாற்றுக்கு முந்திய காலத் தாவரம். இது நமீபியா, மற்றும் தெற்கு அங்கோலாவின் அட்லாண்டிக் சமுத்திர கரையோரமாக ஒரு சிறு பகுதியில் வளர்கிறது. வெல்விட்சியா உண்மையில் ஒரு மரமாகும், ஆனால் முதலில் பார்க்கும்போது அவ்விதம் தென்படாது. முழு தாவரத்திற்கும் ஒரு சிறிய தண்டும் அதிலிருந்து இரண்டு இலைகளும் வளர்கிறன- இவை பெரிய சுருண்ட ரிப்பன்கள் போல் நுனியில் நைந்தும் வறண்டும் இருக்கும். வெல்விட்சியா மிரியாபிளிஸ், சில நேரங்களில் ஒரு குப்பை குவியல் போல் காட்சியளிக்கும்!

இத்தாவரம் எப்போதும் முளைக்கும் பருவத்தில் இருக்கும். (செழுமையான காலத்திலும்) – அது பொதுவாக தாவரங்களில் அபூர்வமானதாகும். வெல்விட்சியா தாவரம் இருபாலும் தனியாக உள்ள தாவரமாக இருப்பதால், விதை உற்பத்திக்கு இரு தாவரங்கள் (ஆண் மற்றும் பெண்) தேவை. பூக்கள் கூம்பில் இருக்கும் (பைன் அல்லது சைகேட் போல்) அவை இலையின் மையப்பகுதியில் அமைந்து இருக்கும்.

பெண் கூம்புகள் முதிர்வடைந்ததும் அழிந்து எடையற்ற இறக்கையுள்ள விதைகளை வெளியிடும், அவை எளிதாக காற்றின் மூலம் பரவும்.

இவை புராதன தாவர வகையான Gnetophyta வை சேர்ந்தவை , ஏறக்குறைய கானிபெர்களை (Pinophyta) போல் இருக்கும். Gnetophytaவில் மூன்று பிரிவுகள் உள்ளன அவை Gnetum சாதாரண இலைகளுடன் முறுக்கிக்கொண்டு தரையில் பரவக் கூடிய வெப்பமண்டல தாவரம், Ephedra புதர் வகை வெல்விட்சியா.

வெல்விட்சியாவிற்கு, 1860 -ல் ஸ்லோவீன் தாவரவியலாளர் பிரட்ரிச் வெல்விச் கண்டுபிடித்தால் அவரது பெயர் சூட்டப்பட்டது. வெல்விட்சியா நம்பியாவின் கடற்கரை ஓரம் வளர்கிறது.

புகைப்படம்

வெல்விட்சியா (Welwitschia mirabilis) பாலைவனத்தின் தீவிர நிலைகளைத் தாங்கி வளரக் கூடியது. இது நீருக்காக மலையை எதிர்பார்த்து இருப்பதில்லை, போதுமான நீரை சமுத்திரத்தில் இருந்து வரும் மூடு பனியில் இருந்து ஈர்த்துக்கொள்கிறது. இதை நீங்கள் வெல்விட்சியா வளர்க்கும்போது மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதிகமான நீரை பாய்ச்சும்போது செடி அழுகி வளர்ப்பு தோல்வி அடைந்துவிடுகிறது. அதனால் விதைகளை மணலான- சரளையான தரையில் (மணல் பருமன் 2–5 மி மி வரை இருக்கலாம்) ஏனென்றால் அதிகமான நீர் தேங்கும் தன்மை, வளர்ப்பதற்கு மிகப் பெரிய இடையூறு ஆகும். வெல்விட்சியா- விற்கு நீர் விடும்போது அதிக கவனம் தேவை- மிக நல்லது ஓரளவுக்கு நனைத்துவிடுவதே. ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பிக்கும், செடிகளை ஜன்னல் அருகில் தென்புறம் பார்த்தபடிவைக்கலாம். வெல்விட்சியா வளர்க்கும்போது உங்களுக்கு அதிக பொறுமை தேவை, ஏனென்றால் அந்தளவு மெதுவாக வளரக் கூடியது. அதற்கு போதுமான வெளிச்சமும் குறைந்தளவு நீரும் கொடுத்தால் நிச்சயம் உங்களைவிட அதிக நாள் வாழும்.

««« முந்திய கட்டுரை: இந்தியத் தாமரை (Nelumbo nucifera) அடுத்த கட்டுரை: ரொட்டிப் பழம். Artocarpus odoratissimus, Marang»»»

செவ்வாய் 28.9.2010 13:16 | இருந்து அச்சிடப்பட்டது | வெளிநாட்டு தாவரங்கள்

KPR பற்றி

KPR கார்டனர்ஸ் கிளப் ஸ்லோவாகியா
KPR - கார்டனர்ஸ் கிளப் ஒரு சர்வதேச தோட்டக்காரர்களின் நிறுவனம். மேலும் அறிய
தாவரங்கள் வளர்ப்பதில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோட்டங்கள் பற்றி, தாவரங்கள், தாவரங்கள் வளைப்பது பற்றி போன்ற கட்டுரைகளை எழுதுங்கள், மேலும் உங்களது மொழியில் எங்களது 'போடானிக்ஸ்' வெளியிடுங்கள்! மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள். செய்திகள்