ரொட்டிப் பழம். Artocarpus odoratissimus, Marang
இனம் ரொட்டிப் பழம் (Artocarpus) இனத்தில் Moraceae ( மல்பரி அல்லது அத்தி) குடும்பத்தை சேர்ந்தவை சுமார் 60 வகைகள் பசுமை மாறா மலைக்காடுகளில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் சமுத்திர தீவுகளில் காணப்படுகிறது. ரொட்டிப் பழங்கள் Ficus வகையோடு நெருங்கிய தொடர்புடையவை. அதிகம் சாகுபடி செய்யப்படும் ரொட்டிப் பழ வகை Atocarpus altilis. மற்ற இதர வகைகள் Artocarpus communis, Artocarpus integer (Cempedak) Artocarpus heterophyllus (Jack furit, Nangka ) மற்றும் Artocarpus odoratissimus (Marang) ஆகியவை ரொட்டிப் பழ வகையில் சேர்ந்தவை.
இந்த கட்டுரை உங்களுக்கு மராங் (Artocarpus odoratissimus) வகையை அறிமுகம் செய்யும். இந்தோனேசியாவின் போர்னியோ தீவுகளில் உள்ள பசுமை மாறா மரமாகும், சுற்றுப்புற நாடுகளான மலேசியா, தாய்லாந்து, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள சந்தைகளுக்காக பரவலாக வளர்க்கப்படுகிறது. இதன் பெயர் உள்ளூர் மொழிகளில், Atau, Keiran, Loloi, Madang, Marang, Pi-ien, Pingan, Tarap, Terap, மற்றும் Khanun Sampalor. . மேற் குறிப்பட்ட நாடுகளுக்கு வெளியில் இந்த வகை அறிமுகமாகவில்லை. இயற்கை வனங்களில் மணற்பாங்கான நிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 மீ உயரத்தில் வளர்கிறது.
Artocarpus odoratissimus மரங்கள் சுமார் 25 மீ உயரம் வரை வளர்கிறன, இலைகள் சுமார் 16 செ.மீ முதல் 50 செ.மீ நீளமும் 11 முதல் 28 செ மீ அகலம் வரையும் இருக்கின்றது.
இரு பாலும் ஒரே தாவரத்தில் இருப்பதால் பழங்கள் உற்பத்தி செய்ய ஒரே மரம் போதுமானது. இம்மரத்தின் பழங்கள் பச்சை நிறமாக முட்டை வடிவில், 16 செ மீ நீளமும் 13 செ மீ அகலமும் சுமார் 1 கிலோ எடையுடனும் இருக்கும் இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம். இருந்தாலும் விதைகள் எப்போதும் சமைத்தே சாப்பிடப் படுகிறது. ரொட்டிப் பழம், தென் கிழக்கு ஆசிய மக்களுக்கு ஒரு இன்றியமையாத உணவு வகையாகும். பழத்தின் உட்பகுதியில் பனி போன்ற வெண்மையில் இனிப்பாக, சதைபற்றுடன், Durian (Durio பூமியில் அதிக மனமுள்ள பழம்) பழ நறுமணத்தோடு இருக்கின்றது. Marang Artocarpus odoratissimus விதைகள் மூலம் பரவச் செய்யப்படுகிறது. புதிய விதைகள் ஒரு வாரத்தினுள் முளைக்கின்றன. இருந்தாலும் மூன்று வாரங்கள் சேமிப்பில் இருந்தால் அவற்றின் முளைப்புத் திறன் குறைகிறது. அதனால் விதைகள் விதைகளை அறுவடை செய்தவுடன் வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலத்தில் விதைக்கப்படுகிறது. தாவர பாகங்கள் மூலம் இனப்பெருக்கம் செய்தால் அந்தளவு வெற்றிகரமானதாக இல்லை, மேலும் மரங்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மிக அபூர்வமாகவே இருக்கின்றது.
ரொட்டிப் பழம் பனிப்பொழிவை
தாங்காது . வெப்பமண்டல
பகுதியில் இருந்து வந்ததால்
குறைந்த பட்ச வெப்பம் 7 ℃ கீழ்
இருக்கக் கூடாது. வெப்பமண்டல
அல்லது அதற்கடுத்த மித
வெப்பமண்டலப் பகுதிகளில்
தோட்டங்களில் ரொட்டிப் பழ
மரங்களை வளார்க்க முடியும்.
ஆனால் பனிப் பிரதேசங்களில்
அவை வீட்டினுள்ளே அல்லது
பசுமைக் குடில்களிலோ வளர்க்க
முடியும்.
««« முந்திய கட்டுரை: வெல்விட்சியா (Welwitschia mirabilis) - வாழும் படிமம் பயிரிடும் முறை அடுத்த கட்டுரை: இந்தோனேசிய மாம்பழங்கள் »»»
புதன் 29.9.2010 15:22 | இருந்து அச்சிடப்பட்டது | நீர்வாழ் மற்றும் நீர் சார்ந்த தாவரங்கள்
KPR பற்றி
தாவரங்கள் வளர்ப்பதில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோட்டங்கள் பற்றி, தாவரங்கள், தாவரங்கள் வளைப்பது பற்றி போன்ற கட்டுரைகளை எழுதுங்கள், மேலும் உங்களது மொழியில் எங்களது 'போடானிக்ஸ்' வெளியிடுங்கள்! மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள். செய்திகள்