Parajubaea torallyi (பால்மா சிகோ , பொலிவியா மலைத் தென்னை).

புகைப்படம்

பொலிவிய மலைத் தென்னை விதைகள்

Parajubaea torallyi தென் அமெரிக்காவின் அழகிய உறுதியான தென்னை வகையாகும். இருந்தாலும் அதன் இயற்கை தாயகத்திற்கு- பொலிவியா விற்கு – வெளியில் பெரிய அளவிலான விதை காரணமாக (அதிக அனுப்புதல் செலவு காரணமாக) அபூர்வமாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

பொலிவியாவை தாயகமாகக் கொண்ட இது வறண்ட, தூசியான, ஆண்டியன் மலைத்தொடர்களுக்கு இடை பள்ளத்தாக்குகளிலும் 2,700 முதல் 3,400 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. அதனால் இது உலகத்தில் உயர்ந்த இடத்தில் வளரும் தென்னை என்ற பெயர் இதற்கு உண்டு. வெப்பநிலை அபூர்வமாக 20℃ க்கு மேல் ஏறும் மேலும் இரவு நேர மூடு பனி மிகச் சாதாரணம். பனிக்காலத்தில் சில நேரங்களில் வெப்பநிலை –7℃ க்கு கீழே செல்லலாம் (ஜூலை ஆகஸ்ட்), மழை அளவு ஆண்டுக்கு 550 மி மி மட்டுமே.

இது வறட்சி, உஷ்ணம், பனி மேலும் மற்ற பிரதிகூல நிலைகளையும் தாங்கி வளருவதால், மேலும் அதன் கம்பீரமான் தோற்றத்தினால் இந்த புராதன தென்னை ஒரு அலங்காரமாக மட்டும் இல்லாது, தோட்டத்தை அழகுபடுத்தும் தென்னை யாக வெப்பமான மற்றும் மித வெப்பமண்டல பிரதேசங்களிலும் விரும்பப்படும் என்று கூறியிருக்கின்றார்கள். பனிப் பொழிவு இருக்கும் பகுதிகளில். பனியில் இருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது அல்லது பனிப்பொழிவு இல்லாத சூழ்நிலை வேண்டும். ஐரோப்பாவில் குறைந்த பட்ச வெப்பநிலையான –3℃ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தென்னை தாக்குப்பிடித்தது –8℃ வரையிலும். இந்த தாவரங்கள் இலைகளை உதிர்த்துவிட்டு பின்னர் வசந்தத்தில் தளிர்க்க ஆரம்பித்தது!

பொலிவியாவில் இம்மரங்கள் 14 மீ உயரம் வரை தடுப் பகுதி 25 –35 செ மீ வரையிலும் வளர்கிறன. 100 ஆண்டுகள் வயதுக்கு மேல் உள்ள தென்னை கள் 30 மீ க்கு மேல் வளர்ந்து உள்ளன, தண்டின் விட்டம் 50 செ மீ. சுமார் 20 இலைகள் கொண்ட உச்சிப்பகுதி 5 மீ நீளம் இருக்கும்! ஆனாலும் பொலிவியாவிற்கு வெளியில் வளரும் தென்னை கள் உயரம் குறைவாக இருக்கின்றன.

இயற்கையில் இருக்கும் தென்னைகளின் வகைகள் இரண்டாகும் அவை அவற்றின் விதை அளவுகளை பொறுத்து மாறுபடுகின்றன. அவை சிறிய விதைகளுடைய P.torallyi var. microcarpa மற்றும் பெரிய பழங்களுடைய P.torallyi var. torallyi தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் var.microcarpa இருந்தாலும் அது பெரிய விதைகளுடைய அளவுகளை அடைவதில்லை, ஆனால் அதன் ஏற்றுக்கொள்ளும் தன்மை, பலம் ஆகியவற்றில் சிறிதும் குறைந்ததில்லை. விதைகளுக்கு நம்பமுடியாத முளைப்புத் திறன் இருக்கின்றது. முளைப்புத் திறன் ஒழுங்கற்று இருந்தாலும், விதைகள் சரியான முறையில் விதைப்பட்டால் எளிதில் முளைத்துவிடுகின்றன. அதாவது விதைபடுகையில் பாதி புதைத்து சிறிதே ஈரத்தை பாராமரிக்க வேண்டும். சரியான முறையில் பராமரிக்கும்போது, குளிரில் இருந்து வெப்ப மண்டல வானிலை வரை சூரிய ஒளி இருக்கும் பகுதிகளில் செடிகள் விரைவில் வளர்ந்த, பலமான தண்டுகளுடைய தென்னை யாக பெரிய இறகுப் பந்து போன்ற உச்சியுடன் நுண்ணிய முட்களுடன் தோல்போன்ற இலைகளுடன் வளரும். அதன் வறட்சி, வெப்பம், குளிர், பனி, மற்றும் மற்ற சாதகமற்ற சூழ்நிலைகளை தாங்கும் திறன் மற்றும் அதன் கம்பீரமான தோற்றத்தினால் இந்த புராதன தென்னை ஒரு அலங்காரமாக மட்டும் இல்லாது, தோட்டத்தை அழகுபடுத்தும் தென்னை யாக வெப்பமான மற்றும் மித வெப்பமண்டல பிரதேசங்களிலும் விரும்பப்படும் என்று கூறியிருக்கின்றார்கள்.

Parajubaea torallyi ஒரு பிரபலமான அலங்காரத் தாவரம், இது பொதுவாக பூங்காக்களில் நடைபாதைகளில் வளர்க்கப்படுகிறது. ஈக்வடார் மற்றும் தென் கொலம்பியாவில் * Parajubaea cocoides * 2500 முதல் 3000 மீட்டர் வரை உயரமுள்ள இடங்களில் வளர்கிறது- இது மெதுவாக வளரும் பணிக்கு எதிரான தாங்கும் சக்தி குறைவான தென்னை வகையாகும். இது ஏறக்குறைய *Parajubaea torallyi * போல் இருப்பதால், இதன் உண்மையான பூர்வீகம் தெரியவில்லை, இது பொதுவாக Parajubaea torallyi யின் பயிர்த் தாவரம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த தென்னை வகையில் மிகச் சிறிய வகை *Parajubaea sunkha * 1996 -ல் விவரிக்கப்பட்டது. அது பொலிவியாவின் சாண்டா குருஸ் மாவட்டத்தில் வல்லேக்ரண்டே பகுதியில் ஆண்டியன் மலைப்பகுதியில் 1700 முதல் 2200 மீட்டார் உயரங்களில் 8 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. இதுபொதுவாக Parajubaea torallyi உடன் தவறாக அடையாளம் காணப்பட்டது ஆனால் சமீபகால அடையாளம் கண்டு பெயரிடும் ஆராய்ச்சியில் இதற்கு வேறு பெயர் Parajubaea sunkha என்று இடப்பட்டது.

Parajubaea வகையின் தென்னைகள் எளிதில் பயிரிடக் கூடியவைகள் ஆகும். சிறந்த பெருக்க முறை விதைகள் மூலம் ஆகும். இருந்தாலும் விதைகள் மெதுவாக ஒழுங்கற்று முளைத்து வரும் வரை பொறுமையுடன் ஒன்னரை ஆண்டுகள் வரை காத்திற்குக்க வேண்டும். சில விதைகள் ஒரு மாதத்திற்குள் முளைக்க ஆரம்பிக்கின்றன. இது மித வெப்பமண்டல தென்னை வகையாக இருப்பதால், இவற்றை சற்று உஷ்ணம் குறைந்த இடங்களில் வைத்திருப்பது நல்லது,உயர்ந்த வெப்ப நிலைகளில் (மற்ற பனை வகைகளை போல் இல்லாமல்) எதிர்மறையான விளைவுகள் முளைப்பதில் ஏற்படலாம். அதிக வெப்ப நிலை வறட்சியை குறிப்பிடுவதால், அது முளைப்பதற்கு உகந்த காலமாகிறது.

விதைகளை நடும் முன் 5 முதல் 7 நாட்கள் வரை 20℃ நீரில் ஊற வைக்க வேண்டும். பெரிய விதை வகைகளை இரண்டு வாரங்கள் ஊற வைக்க வேண்டும். நீரை தினமும் மாற்றி வரவேண்டும். நன்கு முளைப்பதற்காக விதைகளை லேசாக காயப்படுத்திவிட வேண்டும்.

விதைகளை நீரில் ஊறவைப்பது அவற்றின் தூங்கும் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மழைக்காலத்தை ஆரம்பித்து வைக்கும், அது முளைப்பதற்கு பொருத்தமான காலமாகும். உறக்கநிலை பொலிவியாவில் வறட்சியான காலங்கில் முளைக்காமல் பாதுக்கக்கின்றது.(குளிர் காலம் ஜூன் முதல் அக்டோபர் வரை)

நீரில் ஊறவைத்தபிறகு விதைகளை தொட்டியில் அல்லது பிளாஸ்டிக் பையில் ஊன்ற வேண்டும்- விதையில் பாதிப் பகுதி மனலாம் மூடும்படியாகவும் வெப்பநிலை 10℃- 20℃ யிலும் பராமரிக்க வேண்டும்.

நல்ல முளைப்பு மீதான நேரான தாக்கம் பகல் (அதிக வெப்பம்) மற்றும் இரவு (குறைந்த வெப்ப நிலை) வித்தியாசத்தை பொறுத்தது. விதைகளை ஊன்றிய பிறகு அவைகளுக்கு அதிக நீர் தேவையில்லை, அதிகமான நீர் இளம் செடிகளை அழித்துவிடும். மற்ற வகை தென்னைபயிரிடுவதற்கும் Parajubaea பயிரிடுவதற்கும் உள்ள வித்தியாசம் அதற்கு குறைந்த வெப்பநிலையும் நீரும் போதுமானது என்பதே.

விதைத்த பிறகு ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும், மேலும் முளைக்கும் விதைகள் தனித்தனியாக தொட்டியில் இருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள் விதை முளைக்கவில்லை என்றால் சில தென்னை வளர்ப்பாளர்கள் பின் வரும் அறிவுரையை கொடுக்கின்றார்கள்: நீர் ஊற்றுவதை முற்றிலும் நிறுத்திவிட்டு சில மாதங்கள் வரை முற்றிலும் காய விடவேண்டும். விதைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுத்து, மீண்டும் ஒருவாரம் நீரில் மூழ்க வைத்து மீண்டும் விதைக்க வேண்டும்.

இந்த விதைகள் ஊன்றியதில் இருந்து ஆறு மாதங்களில் முளைக்க ஆரம்பிக்க வேண்டும். இன்னும் சில விதைகள் முளைக்கவில்லை என்றால், மீண்டும் இந்த செயல் முறையை மீண்டும் செய்தால் அடுத்த மழைக்காலத்தில் முளைக்க ஆரம்பிக்கும்.

Parajubaea விதைகளின் முளைப்புத் திறன் ஏறக்குறைய 100 % ஆகும், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு வறட்சியான பருவம் இந்த சோம்பேறி விதைகளுக்குத் தேவை.

கன்று வந்தவுடன், அது கடினமாக இருக்கும் ஆனால் அதிகம் நீர் விடக் கூடாது என்பதை ஞாபகம் வைத்திருக்க வேண்டும். ஒரு கன்றுக்கு மிதமான சூழ்நிலை தேவையாக இருக்கின்றது(வனங்களில் அவை பெரிய தென்னைகளின் நிழலில் வளர்கின்றன) இருந்தாலும் கன்றுகளுக்கு போதுமான அளவு வெயில் வேண்டும்.

Parajubaea இனங்கள் தென் அமெரிக்க பனை வகைகளில் அழிந்து வரும் இனமாகும். முக்கிய காரணம் இயற்கை காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மாற்றுவது, மரம் அறுத்தல் மற்றும் கால்நடைகள் அதிகம் மேய்வதும் ஆகும். இந்த தென்னை வகைகள் மிகச் சிறிய பரப்பில் இருப்பதால், விஷயத்தை முக்கியமாகக் கருதி அழிவில் இருந்து காக்க வேண்டும். இந்த தென்னைகளின் பெரிய விதை அளவுகளின் காரணமாக, அவை பரவும் தகுதி குறைகின்றது. இந்த தென்னைகளை மற்ற இடங்களுக்கு பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் பிராணி, ஆச்சரியமான கரடி (Tremarctos ornatus) ஆகும், ஆனால் அதுவும் மனிதனின் செயல்களால் அழிந்து வருகின்றது.

Printed from neznama adresa