இந்தோனேசிய மாம்பழங்கள்

புகைப்படம்

Fragrant Mango (Mangifera odorata)

இந்தோனேசிய போர்னியோ தீவுகளில் 34 வகை மா இனங்கள் (மான்கிஃபெரா) இயற்கையாகவே உள்ளன. மழைக்காடுகளை வேகமாக அளித்து வருவதால் அனேக இனங்கள் ஏறக்குறைய அழியும் நிலையில் உள்ளன. சில மா இனங்கள், உதாரணமாக, களிமண்டன் மா (மான்கிஃபெரா கஸ்தூரி) ஏற்கனவே காடுகளில் அழிந்துவிட்டது.

போர்னியாவில் இயற்கையாக இருக்கும் சில மாமரங்களில் சில வகைகள்; Mangifera griffithi , (உள்ளூரில் asem raba மற்றும் romian என்று அழைக்கப்படுகிறது) Mangifera pajang (asem payang) மற்றும் Mangifera quadrifida (asem kipang). மற்றும் Mangifera torquenda (asem putaran).

Fragrant Mango(மான்கிஃபெரா ஓடோரட்டா) தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் விளையும் மா இனமாகும். இது அதிகம் விளைவிக்கப்படும் மான்கிஃபெரா இண்டிகா (இந்திய மா) மற்றும் Horse Mango (Mangifera foetida) இரண்டின் கலப்பினமாகும். இது உள்ளூரில் kuweni, kuwini (இந்தோனேசிய மொழிகளில்); kweni, asam membacang, macang, lekup (மலாய் மொழியில்); kuwini, ambacang, embacang, lakuik (மினாங்கபு மொழியில்); kuweni, kebembem (படாவி மொழியில்); kaweni, kawini, bembem (சுண்டநீஸ் மொழியில்); kaweni, kuweni, kweni (ஜாவா மொழியில்); kabeni, beni, bine, pao kabine (மதுரேசீ மொழியில்); kweni, weni (பாலி மொழியில்) mangga kuini (வட சுலவேசி); மாற்றும் kuini, guin, koini, kowini, koine, guawe stinki, sitingki, hitingki (மலக்கு தீவுகளில்) என அழைக்கப்படுகிறது.

Printed from neznama adresa