காலிமண்டன் மா, Kasturi (Mangifera casturi)

காலிமண்டன் மா, Kasturi (Mangifera casturi) அல்லது உள்ளூரில் கஸ்தூரி என அழைக்கப்படும் வெப்பமண்டல பழ மரம் சுமார் 10–30 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த வகை பல நோய்களால் தாக்கப்பட்டு இந்தோனேசியாவின் தெற்கு போர்னியோவில் ஒரு சிறு பகுதியான பந்ஜார்மார்ஷின் -ல் இருக்கின்றது. இந்நாட்களில் சட்டவிரோதமாக மரம் அறுப்பதால் ஏறக்குறைய அழிந்துகொண்டு இருக்கின்றது. இருந்தாலும் இது இன்னும் இதன் அருமையான ச ு

காலிமண்டன் மா, கஸ்தூரி (Mangifera casturi) பழங்களை மற்ற மாம்பழங்களோடு ஒப்பிடும்போது சிறிதாக இருக்கின்றது. ஒவ்வொரு பழமும் சுமார் 50 முதல் 84 கிராம் வரை இருக்கின்றது. பழுக்காத நிலையில், பழத்தின் நிறம் பச்சை-பழுத்த பின் , நிறம் பழுப்பு நிறத்தில் இருந்து ஊதா- கருப்பு நிறமாக, பளபளப்பான பெரும்பாலும் ஊதா நிற வெளிப்புறத்தொடு இருக்கின்றது. வர்ண நிலைகளும் பல்வேறு வகைகளான கஸ்தூரி மா வகையை பகுக்கின்றது. இதுவரை மூன்று வகை மான்கிஃபெரா கஸ்தூரியில் – Kasturi, Manga cuban மற்றும் Pelipisan ஆகியவை தனி வகையாக அதன் நறுமணத்தால் கருதப்படுகிறது. Pelipisan வகையை கஸ்தூரி வகையைப் போன்ற இனிய நறுமணத்தோடு வருவதால் இந்த வகை பொதுவாக Kasturi கலப்பினம் என்று கருதப்படுகிறது. இந்த வகையை பகுப்பு செய்து வகைப்படுத்த இன்னும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

புகைப்படம்

காலிமண்டன் மாம்பழங்கள் (Mangifera casturi), போர்னியோ, இந்தோனேசியா

பழத்தின் சதைப் பகுதி ஆரஞ்சு வர்ணத்தில் நார்களோடு ஒரு வித்தியாசமான நறுமணத்தோடு உள்ளது. Kasturi மாம்பழத்தை இந்திய மாம்பழத்தோடு (Mangifera indica) உடன் ஒப்பிட்டால், Kasturi சிறிது இனிப்பு குறைவாக ஆனால் அதிக சுவையோடு மென்மையான நறுமணத்தோடு இருக்கின்றது. Kasturi மாம்பழத்தின் சதைப்பகுதியில் அதிக நார் உள்ளது.

புகைப்படம்

காலிமண்டன் மாம்பழம் பற்றிய விவரங்கள் (Mangifera casturi), போர்னியோ, இந்தோனேசியா

கஸ்தூரி தெற்கு போர்னியோ மக்களிடையே மற்றும் அண்டை பகுதிகளில் மிகப் பிரபலம். இப்பழங்களின் இனிய நறுமணத்தை பற்றி ஒரு பழைய பாடல் இருக்கின்றது, „Seharum kasturi, seindah pelangi, semuanya bermula.“ அதாவது ஓ!, கஸ்தூரியின் நறுமனத்தைப்போல்,வானவில்லைப்போல் அழகாக, இந்த அன்பு அதன் பயணத்தை தொடங்குகிறது"

சட்டவிரோதமாக மரம் அறுப்பதால் காட்டுப்பகுதியில் இந்த இனம் அழிந்து வருகிறது. பழைய களிமண்டன் மா மரங்கள் அதன் மரத்தின் அளவால் தொடர்ந்து மரம் அறுப்பதால் அழிந்து வருகின்றது. இம்மரங்கள் பொதுவாக சிறு அளவில் உள்ளூர் மக்களால் தங்களது கொல்லைப் புறத்தில் அல்லது தோட்டங்களில் அல்லது சிறு பண்ணையாக வளர்க்கப்படுகிறது. மற்ற வெப்பமண்டல பழ மரங்களைப்போல் இல்லாத, களிமண்டன் மாமரத்தின் மெதுவான வளர்ச்சி வேகம் காரணமாக, இந்தோனேசியாவில் பெரிய அளவிலான தோட்டங்கள் அமைக்கப்படவில்லை. களிமண்டன் மரத்தோட்டங்கள் பன்ஜார் மாவட்டத்தில் (பந்ஜார்மஷின் மாவட்டம் வேறு பன்ஜார் மாவட்டம் வேறு) மடரமன் பகுதிகளில் காணப்படுகிறது. மடரமன் பகுதி மக்கள் சிறிய அளவில் 1980 -ல் பயிரிட்டார்கள் முதன் முதலாக 2005 -ல் அறுவடை செய்யப்பட்டது. இருந்தாலும் இப்பழங்கள் உள்ளூர் சந்தைகளில் ஏராளமாகக் காணப்படுகிறது, ஆனாலும் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

களிமண்டன் மா மரத்தின் பயன்பாடு பழங்கள் மற்றும் மரத்தோடு நின்று விடுகிறது. வயதான மரங்கள் 1 மீட்டருக்கு மேல் இருக்கும், அதனால் பன்ஜார் மக்கள் (தெற்கு போர்னியாவில் குடியேறிய உள்நாடு மற்றும் கடற்கரையில் வாழும் பூர்வீக இன மக்கள்) மரத்தின் நீண்ட கால வளர்ச்சியின் காரணமாக பழங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த காரணத்தினால் பன்ஜார் மக்கள் இதுபோன்ற தரமான மற்ற மர வகைகளை பயன்படுத்துகிறார்கள். பழங்களை பறிப்பது மிக எளிதானதில்லை, ஏனென்றால் கஸ்தூரி மரங்கள் அதிக உயரமாக வளர்வதால் பறிப்பதற்கு அதிக உயரம் ஏறவேண்டியது உள்ளது, தானாக உதிரும் பழங்களின் தரம் மிகக் குறைவாக உள்ளது. பழங்களை அப்படியே பழங்களாகவோ அல்லது கஸ்தூரி ஜாமாக பதப்படுத்தி சாப்பிடலாம். இது அதிகம் சந்தைகளில் கிடைப்பதில்லை, ஏனென்றால் விவசாயிகளே உட்கொள்கிறார்கள். மாம்பழத்தில் இருந்து தயார் செய்யப்படும் மற்ற பொருட்கள் காணப்படுவதில்லை, ஏனென்றால் பழங்களுக்கு எப்போதுமே கிராக்கி அதிகம் இருக்கின்றது, மேலும் பன்ஜார் மக்களது விருப்பமான பழமாக இருக்கின்றது. அதன் அருமையான சுவைக்கு என்ன விலையும் கொடுக்கலாம்!

Printed from neznama adresa